சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு..! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவரும் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இதுவரை 13,191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 8228 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .