கோவில் வளாகம் முதல் கருவறை வரை.. ரூ.10 இலட்சம் மதிப்பில் அம்மனுக்கு மாஸ் அலங்காரம்.!

கோவில் வளாகம் முதல் கருவறை வரை.. ரூ.10 இலட்சம் மதிப்பில் அம்மனுக்கு மாஸ் அலங்காரம்.!


Chennai Poonamallee Uthukadu Ellaiyamman Temple Festival

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் திருவிழாவுக்கு ரூபாய் நோட்டுகளை வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள பூந்தமல்லி, குமணன்சாவடியில் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பு ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. 

இந்த திருவிழாவில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து ஆசி வழங்கினார். நேற்று 9-ம் நாளில் அம்மனுக்கு ரூ.10 இலட்சம் நோட்டினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

கோவிலில் இருந்து அம்மன் கருவறை வரையில் ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளினால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாதுகாப்பு பணிகளை பூந்தமல்லி காவல் துறையினர் மேற்கொண்டனர்.