அழகு அள்ளுது! இது நம்ம சென்னை தானா.... சாலையில் அழகாக பூத்துக் குலுங்கும் பிங்க் பூக்கள்! அழகான காட்சி!!!



chennai-pink-trumpet-blossom-drone-video-viral

சென்னை நகரத்தின் வழக்கமான வெயிலும், போக்குவரத்து பரபரப்பும் நடுவே எதிர்பாராத மாற்றம் ஒன்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. மதுரவாயல் பகுதியில் பிங்க் நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாலைகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகள், நகரத்தை முற்றிலும் வேறொரு தோற்றத்தில் காட்டியுள்ளன. டிரோன் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிரோன் காட்சிகள் வைரல்

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ராம் பதிவு செய்த வீடியோவில், மதுரவாயல் மேம்பாலம் அருகே சாலைகளின் இருபுறமும் பிங்க் மலர்கள் அடர்த்தியாக பூத்துள்ள காட்சி தெளிவாக தெரிகிறது. அந்த மலர்களுக்கிடையே வாகனங்கள் செல்வது, ஜப்பானின் செர்ரி பிளாசம் திருவிழாவை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

எந்த மரம் இது?

இந்த அழகுக்கு காரணமானது ‘பிங்க் ட்ரம்பட்’ எனப்படும் மரங்கள். பொதுவாக குளிர்காலம் முடிவடையும் நேரத்திலும் கோடைக்காலம் தொடங்கும் கட்டத்திலும் இவை இலைகளை உதிர்த்துவிட்டு மலர்கின்றன. இதனால் மரங்கள் முழுவதும் பிங்க் நிறத்தில் மாறி, அந்த பகுதி ஒரு வித்தியாசமான தோற்றத்தை பெறுகிறது.

இதையும் படிங்க: பக்தியின் வெளிப்பாடு! அதிகாலை 4 மணிக்கு...சத்தமாக ஒலித்த ஒரு குரல்! அதிகாலை ஆன்மீக ஒலியால் மெய்சிலிர்க்கும் காட்சி..!!!

சென்னைவாசிகள் உற்சாகம்

மதுரவாயல் மட்டுமின்றி ஓ.எம்.ஆர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளிலும் இதேபோன்ற காட்சிகள் தென்படுகின்றன. தினமும் அந்த சாலைகளில் பயணம் செய்தும் இவ்வளவு அழகை கவனிக்கவில்லை என்று பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மலர்கள் இன்னும் சில வாரங்களில் உதிர்ந்து விடும் என்பதால், குடும்பங்களுடன் அந்த இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

இதையும் படிங்க: Video : ஈரோட்டை அதிரவைத்த விஜய்யின் ‘மாஸ்’ செல்ஃபி! வீடீயோவை வெளியிட்ட விஜய்! இணையத்தில் செம வைரல்!