தமிழகம்

ச்சீ., கருமம்.. செல்போனுக்கு ஆ., மெசேஜ், வீடியோ.. உதவிக்காக செல்போன் கொடுத்த பெண்ணுக்கு பயங்கரம்.!

Summary:

ச்சீ., கருமம்.. செல்போனுக்கு ஆ., மெசேஜ், வீடியோ.. உதவிக்காக செல்போன் கொடுத்த பெண்ணுக்கு பயங்கரம்.!

சென்னையில் உள்ள பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ராணி (வயது 32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், எனது வாட்சப் நம்பருக்கு அருவருக்கத்தக்க வகையில் ஆபாச மெசேஜ், ஆபாச படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படுகிறது. 

நான் அதனை அளித்துவிட்டாலும், மீண்டும் அதனை அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எதிர்வீட்டை சேர்ந்த பெண்மணி, எனது அலைபேசியை வாங்கி அவசரம் என்று கூறி ஒருவரிடம் பேசினார். 

அதன்பின்னர் தான் இவ்வாறான ஆபாச வீடியோ, புகைப்படம் போன்றவை எனக்கு வருகிறது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனக்கு ஆபாச படங்கள் அனுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement