9, 10 ம் தேதியில் மழைக்கு வாய்ப்பு.. 11, 12, 13-ல் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai meotrological centre heavy rain alert

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதியில் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

11-ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். 

chennai

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் ஏழு சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் ஆறு சென்டிமீட்டர் மழையும், அவலாஞ்சி சோலையார் பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஒன்பதாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மன்னார்குளைகுடா, 

தென் தமிழக கடலோர பகுதி, வடக்கு கேரளா கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.