எம் பிள்ளை அப்டித்தான்., நீ அவன் கூட படு.. கணவன், மாமியார், தோழியால் பெண்ணுக்கு நடந்த சோகம்.! கண்ணீர் குமுறல்.!
எம் பிள்ளை அப்டித்தான்., நீ அவன் கூட படு.. கணவன், மாமியார், தோழியால் பெண்ணுக்கு நடந்த சோகம்.! கண்ணீர் குமுறல்.!

பல் மருத்துவர் தனது காதலியை நண்பர்களுக்கு இரையாக்க நினைத்த நிலையில், பெண் சுதாரிப்பாக தப்பித்து கேடி கும்பலை சிக்க வைத்துள்ளார். பல் மருத்துவர் என்ற காம அரக்கனின் அசுரத்தனம் குறித்த தகவலை தெரிவிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சார்ந்த 30 வயது பெண்மணி, தாம்பரம் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "நான் பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு பின்னர் ஷெரின் என்பவரின் மூலமாக அப்பகுதியை சார்ந்த பல் மருத்துவர் நிஷாந்த் (வயது 32) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது.
நிஷாந்திற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. இந்த நிலையில், அவர் தனக்கு விவாகரத்து ஆன தகவலை தெரிவித்து, நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். அவர் முதலில் நல்லவன் போல தோற்றம் கொண்டதால் நானும் அவரின் மீது காதல் வயப்பட்டு அன்பாக இருந்து வந்தோம். இதனால் இருவரும் நெருங்கி பழகினோம். பல இடங்களுக்கு சென்று வந்தோம்.
அவர் என்னிடம் கேட்கும் நேரமெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்து வந்தேன். காதலின் மிகுதியால் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவியாக வாழ தொடங்கினோம். இவ்விசயம் நிஷாந்தின் தாய் சத்யாவிற்கும் தெரியும். இந்த நிலையில், போதை பொருட்களை உபயோகம் செய்ய தொடங்கிய நிஷாந்த், என்னை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்து, நிஷாந்தின் தாயாரிடமும் தகவலை தெரியப்படுத்தினேன். அவரோ "என் மகன் அப்படிதான். அவனை பிடிக்கவில்லை என்றால் விலகிச்செல்" என்று கூறிவிட்டார். அவனின் நண்பர்களுடன் நான் உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்ததால், அவன் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினான். கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டினான். அவனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவே, அதில் பெண் அளித்த புகாரில் உள்ள பதைபதைப்பு தகவல் உண்மை என அம்பலமானது. இதனையடுத்து, ஷெரின், ஹர்த்திக், நிஷாந்த் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். மேலும், நிஷாந்துக்கு போதை வஸ்துக்கள் எங்கிருந்து கிடைத்து எனவும் விசாரணை நடந்து வருகிறது.