தலைகீழாகத்தான் குதிப்பேன்..நண்பனை வீடியோ எடுக்கச்சொல்லி பாறையில் மோதி உயிரைவிட்ட தோழன்.!Chennai Man Died Tirupati Water Falls

சென்னையைச் சேர்ந்த சுமன் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பருடன் திருப்பதியில் இருக்கும் தலகோனாவுக்கு நேற்று மாலைநேரத்தில் வார விடுமுறையை ஒட்டி சுற்றுலா சென்றுள்ளார். 

அந்த சமயத்தில் நீர்வீழ்ச்சியின் மேல்பகுதியில் இருந்து தலைகீழாக குதிப்பதாக சொல்லி நண்பரிடம் வீடியோ எடுக்க சொல்லியுள்ளார். மேலிருந்து தலைகீழாக குதித்த சுமன் தண்ணீருக்குள் விழுந்து தலை பாறைக்கு நடுவே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

tamilnadu

இந்த விஷயம் தொடர்பாக அவர் நண்பர் மீட்பு பணியாளருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் வந்து அவரின் உடலை மீட்டனர். மேலும் இதுபோன்ற தவறை இனி யாரும் செய்யாதீர்கள் என்று அறிவுரையும் வழங்கியுள்ளனர்.