திமுக வட்ட செயலாளர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. கட்சி அலுவலகம் அருகே பயங்கரம்.! சென்னையில் பரபரப்பு.!!Chennai Madipakkam DMK Supporter Murder

சென்னையில் உள்ள மடிப்பாக்கம், 188 ஆவது வார்டு திமுக வட்ட செயலாளர் செல்வம் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி மாநகராட்சி தேர்தலில், 188 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் செல்வம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில், செல்வத்திற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்ததால், 10 மீட்டர் தூரம் சென்று சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பொன்னாடை போர்த்துவது போல வந்து செல்வதை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வத்தை மீட்ட கட்சியினர், அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

chennai

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, ஆதரவாளர்கள் ஆட்பறித்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், மடிப்பாக்கம் பகுதியில் செயல்படும் கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில், செல்வத்தின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. பரங்கிமலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.

நகர்ப்புற தேர்தலில் வேட்பாளர் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலால் செல்வம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.