13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
மாடலிங் இளம்பெண் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டியவர் கொளத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சார்ந்த 21 வயது பெண்மணி, மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் செல்போன் மூலமாக அறிமுகமான நபர், தன்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Manager) ரஞ்சித் என்று கூறி அறிமுகம் செய்து, பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக பழகியுள்ளார்.
மேலும், பெண்ணுக்கு அவ்வப்போது தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், ரஞ்சித்தின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த பெண்மணி தொடர்பை துண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், தனது பெயரை தீக்சா குப்தா என்று மாற்றி, வேறொரு செல்போன் ஏன் மூலமாக பெண் போல 21 வயது பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
நானும் மாடலிங் துறையில் இருக்கிறேன், தங்களின் மாடலிங் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று 21 வயது பெண்ணிடம் கூறவே, மறுமுனையில் பேசும் நபர் பெண்மணி என்று நினைத்த இளம்பெண்ணும் தனது மாடலிங் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை பெற்ற ரஞ்சித், அதனை ஆபாசமாக சித்தரித்து 21 வயது பெண்ணுக்கு அனுப்பி இருக்கிறார்.
மேலும், இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டவே, பெண்மணி தனது தந்தையிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். பெண்ணின் தந்தை கொளத்தூர் V6 காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அண்ணாநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் 21 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை முறைகேடான வகையில் பெற்று, அதனை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ரஞ்சித் (வயது 26) என்பவரை கைது செய்தனர். ரஞ்சித்திடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. தற்போது விசாரணைக்கு பின்னர் ரஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.