வீடு வாடகைக்கு விட்டு ரூ.1 இலட்சம் முன்பணத்தில் ஏமார்ந்த உரிமையாளர்.. சென்னையில் நூதன மோசடி.!

வீடு வாடகைக்கு விட்டு ரூ.1 இலட்சம் முன்பணத்தில் ஏமார்ந்த உரிமையாளர்.. சென்னையில் நூதன மோசடி.!Chennai Kilpauk House Owner Loss Money

சென்னையில் வசித்து வரும் ஜிதேந்தர் என்பவருக்கு, கீழ்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விடுவதாக தனியார் இணையதளம் மூலமாக விளம்பரம் கொடுத்துள்ளார். 

கடந்த 18 ஆம் தேதி ஜிதேந்தரை தொடர்பு கொண்ட அணிகேட் விஜயகுமார் என்பவர், தன்னை மத்திய தொழிற்படை பாதுகாப்பு உதவி ஆய்வாளர் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார். மேலும், டெல்லியில் இருந்து பேசுவதாகவும், சென்னை பணிமாற்றம் செயப்பட்டுள்ளதால் கீழ்பாக்கம் பகுதியில் வீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

வீட்டிற்கு முன்பணம் ரூ. ஒரு லட்சம் செலுத்துமாறு ஜிதேந்தர் கூறவே, இராணுவ விதிகளின்படி நேரடியாக தங்களால் எந்த வங்கியிலும் பணம் அனுப்ப முடியாது. முதலில் நீங்கள் பணம் அனுப்பி பரிவர்த்தனையை தொடங்கினால், மீண்டும் பணம் அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.

chennai

இதனை நம்பிய ஜிதேந்தரும் விஜயகுமார் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தவே, முன்பணம் ரூ.1 இலட்சத்துடன் ரூ.2 இலட்சமாக பணம் வந்துவிடும் என்று நினைத்தவருக்கு இன்று வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.