குடும்ப சண்டையில் பயங்கரம்.. 6 மாத கைக்குழந்தை உயிருக்கு போராடும் பரிதாபம்.. தந்தையின் வெறிச்செயல்..!Chennai Kilpauk Father Murder attempt 6 Month Child Baby

சென்னையில் உள்ள கீழ்பாக்கம், 6-வது தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 32). இவரின் மனைவி திரிஷா (வயது 26). தம்பதிகளுக்கு 2 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் பிறந்து 6 மாதமாகும் ஆண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபட்டால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சுரேஷ் 6 மாத கைக்குழந்தையை தூக்கி தெருவில் வீசி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு தாயுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

chennai

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தலை மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ய முயற்சித்துவிட்டோம் என சுரேஷ் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். 

பின்னர், வீட்டில் துணி துவைக்க வைத்திருந்த ரசாயனத்தை குடித்து அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவே, அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.