இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Chennai IMD Weather Update

வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 9 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதியை பொறுத்தவரையில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.