தமிழகம்

அலைவடிவில் சந்திக்கும் வட - தென் கோள காற்றுகள்.. வானிலை ஆய்வு மைய புகைப்படம் வைரல்.!

Summary:

அலைவடிவில் சந்திக்கும் வட - தென் கோள காற்றுகள்.. வானிலை ஆய்வு மைய புகைப்படம் வைரல்.!

இந்தியாவை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் நல்ல மழைபொழிவை வழங்குகிறது. கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் தோன்றும் பருவமழை, மெல்ல நகர்ந்து இமயமலை வரை பயணித்து தனது திசையை மாற்றி கல்கத்தா வரை செல்கிறது. 

வருடத்தின் பருவமழை காலத்தில் இந்நிகழ்வு நடக்கிறது. இதனால் கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தானின் சில பகுதிகள், டெல்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்திரகன்ட், மேற்கு வங்கம், பீகார், அருணாச்சல பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் நல்ல மழைபொழிவை பெறுகிறது. 

இதனைப்போல, வடகிழக்கு பருவமழை வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதியில் தோன்றும் நிலையில், இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகாவின் சில பகுதிகள் நல்ல மழைபொழிவை பெறுகிறது. இவ்வாறான பருவமழை பிற நாடுகளிலும் எதிரொலிக்கிறது. 

இந்நிலையில், அலை வடிவில் வடக்கு - தெற்கு கோளங்களின் காற்றுகள் சந்திக்கும் புகைப்படத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பதிவு வைரலாகி வருகிறது.


Advertisement