31 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை எங்கெங்கு பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.!

31 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை எங்கெங்கு பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.!



Chennai IMD Report Tamilnadu Rain Coming 4 Days

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 27 ஆம் தேதியான இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மணி முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

28 ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 29 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதியை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

chennai

31 ஆம் தேதியை பொறுத்தவரையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். தலைநகர் சென்னையை பொருத்தவரையில் வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 4 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், தென்காசி மாவட்டம் ஆயக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, நீலகிரி மாவட்டம் கோடநாடு, சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக நாளை 28 ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.