தமிழகம் வர்த்தகம் லைப் ஸ்டைல்

ஒரே நாளில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை! நகைக்கடைகளை நோக்கி ஓடும் மக்கள்..!

Summary:

Chennai gold rate 536 rupee reduced

அமெரிக்க மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால்  தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீரென குறைத்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில்  மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ள நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.67 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.3,830க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 536 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.30,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாட்களால 31 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டுவந்த தங்கம் தற்போது மீண்டும் ரூ. 31 ஆயிரம் கீழ் வந்துள்ளது. திருமண சீசன் நெருங்கி வருவதால் எங்கு மீண்டும் தங்கத்தின் விலை ஏறிவிடுமோ என்றோ பயத்தில் மக்கள் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.


Advertisement--!>