ரூ.18 இலட்சத்துக்கு நாமம் போட்ட கவுன்சிலர்... தீக்குளிக்க முயற்சித்த திமுக தொண்டர்.. பட்டப்பகலில் பகீர் சம்பவம்.!

ரூ.18 இலட்சத்துக்கு நாமம் போட்ட கவுன்சிலர்... தீக்குளிக்க முயற்சித்த திமுக தொண்டர்.. பட்டப்பகலில் பகீர் சம்பவம்.!


Chennai DMK Supporter Suicide Attempt Officers Rescued

சென்னையில் உள்ள வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 35). இவர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறை அதிகாரிகள், அவரை மீட்டு அமைதிப்படுத்தினார். மேலும், அவரிடம் என்ன பிரச்சனை என கேட்டறிந்தனர். அப்போது, சதீஷ் தி.மு.க பிரமுகர் என்பது தெரியவந்தது. 

சதீஷ் கவுன்சிலர் ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதற்காக பணம் கொடுத்துள்ளார். இவ்வாறாக 6 பேரிடம் ரூ.18 இலட்சம் பணம் வாங்கி கொடுத்துள்ளார். கவுன்சிலரோ வேலையை வாங்கி கொடுக்காமல் இழுத்தடிக்க, பணம் கொடுத்தவர்கள் சதீஷை நெருக்கடி செய்துள்ளனர். 

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கவுன்சிலரின் தரப்பில் இருந்து சதீஷுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சதீஷிடம் புகாரை பெற்ற காவல் துறையினர், வேளச்சேரி அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.