நிலக்கரி ஊழல் விவகாரம்.. சென்னை கோஸ்டல் எனர்ஜி விளம்பரதாரர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி.!

நிலக்கரி ஊழல் விவகாரம்.. சென்னை கோஸ்டல் எனர்ஜி விளம்பரதாரர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி.!



chennai-costal-energy-employee-arrested-by-enforcement

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்த நிலக்கரிகள் சுமார் 2.38 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மாயமானதாக புகார் எழுந்தது. மேலும், நிலக்கரி வாங்குவது தொடர்பான விவகாரத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. 

பொதுத்துறை நிறுவனங்களிடம் நிலக்கரி வழங்க அதிக விலை பதிவிட்டு, சந்தை மதிப்பில் உள்ள நிலக்கரி விலையை அதிகமாக மதிப்பீடு செய்து பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. 

chennai

இந்த விஷயம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் நிறுவனத்தின் விளம்பரதாரர் அகமது ஏ.ஆர் புஹாரியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏ.ஆர் புஹாரியை PMLA சட்டத்தின் கீழ், நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.