தமிழகம்

சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி எது தெரியுமா? மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்!

Summary:

Chennai corona most affected

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை கொரோனா நோயால் தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.

அதில் தமிழகத்தில் தலைநகரமான சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ராயப்புரத்தில் மட்டும் 27 பேர் பாதிக்கப்பட்டு சென்னை மண்டலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தப்படியாக திரு வி க நகர் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதியில் மொத்தமாக 14 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடமாக கோடம்பாக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை 10, தண்டையார்பேட்டை 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இதுவரை சென்னை மண்டலத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் மணலி பகுதியில் மட்டும் எந்தவித பாதிப்பும் ஏற்ப்படவில்லை. ஆக மொத்தமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement