மாங்கல்ய பூஜை செய்வதாக தொழிலதிபருக்கு நாமம் போட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி..!

மாங்கல்ய பூஜை செய்வதாக தொழிலதிபருக்கு நாமம் போட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி..!


chennai business man lodge complaint against coimbatore

தொழிலதிபரிடம் மாங்கல்ய பூஜை செய்வதாக நாடகமாடி நகை மற்றும் பணம் மோசடி செய்த பிரபல கட்சியின் ஜோதிடர் பிரிவு நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசன்ன ஸ்வாமிகள். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத்தலைவர் ஆவார். 

இந்நிலையில், இவரிடம் சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மாங்கல்ய பூஜை செய்யக்கூறி கோரிக்கை வைத்துள்ளார். 

இதனை ஏற்றுக்கொண்ட பிரசன்ன ஸ்வாமிகள் தொழிலதிபரிடம் இருந்து 15 சவரன் தாலி சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

நகை மற்றும் பணத்தை தொழிலதிபர் மீண்டும் கேட்டபோது சரிவர பதில் அளிக்காத நிலையில், தொழிலதிபர் பிரசன்ன ஸ்வாமிகள் உட்பட 4 பேரின் மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். பிரசன்ன ஸ்வாமிகள் உட்பட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.