தமிழகம் இந்தியா

வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி சென்னையில் தவிக்கவிட்ட தொழிலதிபர்! மாணவியின் திடுக்கிடவைக்கும் புகார்!

Summary:

chennai business man cheated foreign student

லிதுவேனியா நாட்டை சேர்ந்த 22 வயது நிரம்பிய இளம்பெண் சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பல்வேறு கனவுகளுடன் நான் துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தேன். அப்போது சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது என்பவர் என்னை சந்தித்து பேசினார். 

தொடர்ச்சியாக என்னுடன் நெருங்கி பழகிய அவர் என்னை காதலிப்பதாக கூறி அன்னை அடிக்கடி சந்தித்து என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்து மிகவும் நெருக்கமாக பழகினார். இந்தநிலையில், நான் கர்ப்பமானேன்.

இதனைத்தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கவைத்தார். பின்னர் அவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தி தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் எனக்கு கருக்கலைப்பு நடந்தது.

அதன்பிறகும் அவர் தன்னை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று, என்னோடு உல்லாசமாக இருந்தார். அதன் விளைவாக தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

சென்னையில் என்னை தனியாக தவிக்க விட்டு ருமையாஸ் தலைமறைவாகி விட்டார் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ருமையாஸை போலீசார் தேடிவருகின்றனர்.


Advertisement