தமிழகம்

100 ரூபா செலவுக்கு தரமாட்டியா? நீயெல்லாம் என்னடா மேஸ்திரி.. கொலையாளியாக கொத்தனார்.!

Summary:

100 ரூபா செலவுக்கு தரமாட்டியா? நீயெல்லாம் என்னடா மேஸ்திரி.. கொலையாளியாக கொத்தனார்.!

செலவுக்கு ரூ.100 கொடுக்க மறுத்த மேஸ்திரியை கொத்தனார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி, ஆனந்தா நகர் பகுதியை சார்ந்தவர் சிவகுமார் (வயது 50). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம், அப்பகுதியை சார்ந்த பூபதி என்பவர் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வேலை முடிந்ததும், இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போது, பூபதி தனது மேஸ்திரி சிவகுமாரிடம் செலவுக்கு ரூ.100 கேட்டுள்ளார். 

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய சிவகுமார், பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவததால் ஆத்திரமடைந்த பூபதி, இரும்பு கம்பியால் சிவகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த சிவகுமார், நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பூபதியை வலைவீசி தேடி வந்தனர். 

போதை தெளிந்ததும் தவறை உணர்ந்த பூபதி, நேற்று காலை நேரத்தில் நேரடியாக ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Advertisement