JustIN: சென்னை: வங்கி, நிதிநிறுவனம் என 20 இடங்களில் ரூ.5 கோடி கடன்.. கழுத்தை நெரித்த சுமையால் 10 நாட்களில் குடும்பத்தோடு விபரீதம்.! 



Chennai Anna Nagar Doctor bala Murugan Family Dies By Suicide 


சென்னையில் உள்ள அண்ணா நகர், மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலமுருகன் (53). இவரின் மனைவி சுமதி (47). மருத்துவரான பாலமுருகன் ஸ்கேன் சென்டர் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். தம்பதிக்கு ஜஸ்வந்த் குமார் (19) மற்றும் லிங்கேஷ்குமார் (17) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

இதனிடையே, இன்று இவர்கள் நால்வரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மருத்துவருக்கு ரூ.5 கோடி கடன் இருப்பதும், மாதம் ரூ.6 இலட்சம் அளவில் தவணை செலுத்த வேண்டியதும் தெரியவந்தது. இதனால் கடனை அடைக்க முடியாமல் குடும்பத்துடன் விபரித முடிவை தேடிக்கொண்டனர்.

chennai

20 இடங்களில் கடன்

இந்நிலையில், 20 க்கும் மேற்பட்ட வங்கிகளில் மருத்துவர் கடன் வாங்கி இருக்கிறார். தனியார் வங்கி, அரசு வங்கி, நிதி நிறுவனங்கள், தனிநபர் என மொத்தமாக ரூ.5 கோடி 80 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். இது தவிர்த்து தெரிந்தவர்களிடமும் கடனை வாங்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: தவெக கட்சியில், விஜயின் உதவியாளர் மகனுக்கு மா.செ பொறுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வட்டிக்கும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிக கடன் நெருக்கடி காரணமாக விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஒட்டுமொத்த கடனும் ஒரே நேரத்தில் நெருக்கி இருக்கிறது. இதனால் திணறிப்போன தம்பதி விபரீத முடிவை எடுத்துக்கொண்டுள்ளது.

chennai

ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த கோல்டன் ஸ்கேன் சென்டரை கடன் வாங்கி 4 இடங்களில் அடுத்தடுத்து அமைதவவர்கள், அதில் எதிர்பாராத இலாபம் கிடைக்காமல் திணறி இருக்கின்றனர். இதனால் கடனுக்கு கடன் என வாங்கி, இறுதியில் அனைத்து கடனும் ஒரே நேரத்தில் நெறுக்கியதால் விபரீதம் நேர்ந்தது நடந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.5 கோடி கடனுக்கு தவணை மாதம் ரூ.6 இலட்சம்.. கடன் தொல்லையால் தம்பதி விபரீதம்.. குடும்பமே மரணம்.!