கள்ளக்காதலியின் மகளை படுக்கைக்கு அழைத்த காவல் உதவி ஆய்வாளர் : 7 ஆண்டுகளாக துயரம்.. எஸ்.ஐ போக்ஸோவில் கைது.!

கள்ளக்காதலியின் மகளை படுக்கைக்கு அழைத்த காவல் உதவி ஆய்வாளர் : 7 ஆண்டுகளாக துயரம்.. எஸ்.ஐ போக்ஸோவில் கைது.!


chennai-alandur-affair-police-arrest-pocso

கணவரை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த காவல் உதவி ஆய்வாளர், பெண்ணின் மகளுக்கு அவரின் 13 வயதில் இருந்து இன்று வரை பாலியல் தொல்லை கொடுத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 50 வயதாகும் காவல் உதவி ஆய்வாளரின் அநாகரிக செயலால் சிறுமி இளம்பெண்ணாகியும் பாலியல் தொல்லை தொடர, விசாரணையில் அம்பலமான பகீர் உண்மையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ் (வயது 50). சென்னை மாநகராட்சி காவல்துறையில் வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பெண்மணி கணவரை பிரிந்து பெண் குழந்தையோடு வசித்து வருகிறார். 

இந்த பெண்மணியுடன் பாண்டியராஜன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளக்காதல் உறவில் இருந்த நிலையில், பெண் குழந்தைக்கு கடந்த 2017 ல் 13 வயது ஆகியுள்ளது. சிறுமியின் தாயுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த காவல் உதவி ஆய்வாளர், சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

chennai

இன்று வரை அத்துயரம் தொடர்ந்து வந்த நிலையில், சிறுமி கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறார். இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவியை பாலியல் ரீதியான உறவுக்கு அழைத்து காமுகன் பல விதங்களில் தொந்தரவு செய்து வந்துள்ளான். இதனை தாங்க இயலாத பெண்மணி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியாக இருந்த சமயத்தில் இருந்து பெண்மணி அனுபவித்த பாலியல் துயரங்கள் தொடர்பான பகீர் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் பாண்டியராஜனை சிறையில் அடைத்தனர்.