பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் எடுத்து, ஆபாசமாக பதிவிட்ட 33 வயது இளைஞர்..!

பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் எடுத்து, ஆபாசமாக பதிவிட்ட 33 வயது இளைஞர்..!


Chengalpattu Woman Photo Cheated by 33 Aged Youngster Police Arrest Accuse

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி கலைவாணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு வைத்துள்ள நிலையில், அதில் தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், மர்ம நபரொருவர் பெண்ணின் இன்ஸ்டா கணக்கில் உள்ள புகைப்படத்தை பதிவிறக்கி, ஆபாசமாக சித்தரித்து போலியான கணக்கு தொடங்கி, அதனை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

Chengalpattu

இந்த விஷயம் இளம்பெண்ணுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக தெரியவரவே, அதிர்ச்சியடைந்த பெண்மணி செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரி ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து, முனீஸ்வரன் (வயது 33) என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.