பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த விசிக பிரமுகரின் மகள்: கொலைவெறியோடு காதலனின் வீட்டில் பகிரங்க மிரட்டல்.!

பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த விசிக பிரமுகரின் மகள்: கொலைவெறியோடு காதலனின் வீட்டில் பகிரங்க மிரட்டல்.!


Chengalpattu VCK Supporter Daughter Love Married 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமதி, கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரின் மகன் ஹரிஷ். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், பாலையூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி.

இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த நிலையில், காதல் வயப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில், ஆர்த்தியின் காதல் விவகாரம், அவரின் பெற்றோருக்கு தெரியவந்து, வேறொரு இடத்தில் வரன் பார்த்து வந்துள்ளனர். 

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஆர்த்தியின் முயற்சியின் பேரில் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளது. இதற்கிடையில், ஆர்த்தியின் தந்தை மற்றும் உறவினர்கள் ஹரிஷின் வீட்டில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

தங்களை தந்தை கொலை செய்ய வாய்ப்புள்ளதை உணர்ந்த மகள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்த்தியின் தந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அரசியல் செல்வாக்கு கொண்ட நபராக இருந்து வருபவர் என கூறப்படுகிறது. 

இதனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவர் மகளை மீட்க முயற்சிக்கும் நிலையில், காதல் ஜோடி தங்களுக்கும், ஹரிஷின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. 

இதனையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், காதல் ஜோடிக்கு பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தார். காதல் ஜோடி திருமண வயது வந்தவர்கள் என்பதால், இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.