தமிழகம் இந்தியா

அடங்காத ஆசிரியை, காம வெறியில் போட்ட ஆட்டம்! அடக்கிய போலீசார்!

Summary:

Channai famous school teacher abused her 12 standard student

சென்னை: பிரபல தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது மாணவனுக்கு கொடுத்த பாலியல் தொல்லை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவனுக்குத்தான் இந்த பாலியல் தொல்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவனின் ஆசிரியையே பாலியல் தொல்லை கொடுத்ததுதான். குறிப்பிட்ட மாணவனுக்கு  அதே பள்ளியில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் கற்றுவிக்கும் ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

தகவல் அறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட, உடனே ஆசிரியை பள்ளியைவிட்டு நீக்கியது பள்ளி நிர்வாகம். அப்பொழுதும் அடங்காத அந்த ஆசிரியை தொலைபேசி வழியாக மீண்டும் அந்த மாணவனை சீண்டியுள்ளார். தினமும் போன் செய்வது, மாணவனிடம் ஆபாசமாக பேசுவது என நீண்டுள்ளது ஆசிரியையின் அக்கிரமம்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இதை தெரிவிக்க, மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பெற்றோரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அதிரடியாக ஆசிரியை கைது செய்து, அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement