அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பெண்கள் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா... பதறிப் போன பெண்கள்.... தங்கும் விடுதியை சூறையாடிய உறவினர்கள்...!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் ஹோட்டல் சோழா இன் என்ற தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில், சீர்காழியில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருபவர்கள் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்திருந்தனர்.
சென்னையில் இருந்து திருமணத்திற்கு வந்திருந்த தந்தை, இரண்டு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மூன்று அறைகள் ஒதுக்கியிருந்தனர். இந்நிலையில் முதலில் வந்த தந்தைக்கும், மகனுக்கும் இரண்டு அறைகளை எடுத்துக்கொண்டு பின்னால் வரும் மூத்த மகனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறையின் சாவியை லாட்ஜில் ரிசப்ஷனில் கொடுத்து விட்டு நேற்று மாலை அவர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
தாமதமாக வந்த குடும்பத்தினர் ரூம் சாவி கேட்டுள்ளனர் லாட்ஜில் வேலை ஊழியர் சாவி தங்களிடம் கொடுக்கவில்லை என்றும், உறவினர்கள் எடுத்துச் சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் லாட்ஜ் ஊழியர் சென்னையில் இருந்து வந்த பெண்களுக்கு வேறு ஒரு அறையில் உடைகளை மாற்றி கொள்ள அனுமதித்துள்ளனர்.
உடைமாற்ற சென்ற பெண்கள் அந்த அறையில் சிசிடிவி கேமரா இருந்ததை பார்த்து பதறிப் போன பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் இது குறித்து கூறினர். தகவல் கேட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து விடுதிக்கு விரைந்து வந்த உறவினர்கள் இது தொடர்பாக விடுதியில் வேலை செய்பவர்களிடம் கேட்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது அவசர அவசரமாக சிசிடிவியை நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் உறவினர்கள் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து பிரச்சினையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட லாட்ஜ் ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.