
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை சாந்தினி தேவா
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை சாந்தினி தேவா. அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாந்தினி தேவா கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுகிறார். அவரால் சிலமுறை கருக்கலைப்பு செய்துள்ளேன். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டால் அவர் எனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். மேலும் கூலிப்படையை வைத்து தன்னை கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டலும் விடுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், எனக்கு அந்தப் பெண் யாரென்றே தெரியாது. அவர்கள் பணம் பறிக்கும் கும்பல். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
Advertisement
Advertisement