தமிழகம்

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதும் நாசமான சொகுசு கார்! நடந்தது என்ன? பதறி ஓடிய மக்கள்!

Summary:

car burning in road near karur highways

புதுக்கோட்டை மாவட்டம், தளிஞ்சியை சேர்ந்தவர் குருநாதன் 27 வயது நிறைந்த இவர் பொலிரோ ஜீப் ஓட்டுநராக உள்ளார்.  இந்நிலையில் அந்த ஜீப்பில் இன்ஜின் ஆயில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வரும் திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன், ஜம்புலிங்கம், அருளரசு ஆகியோர் கரூரில் இருந்து தங்களது வேலையை முடித்துவிட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது கிருஷ்ணராயபுரம் முருகன் கோவில் அருகே வந்தபோது வாகனத்தில் திடீர் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரைவர் பிரபாகரன் ஜீப்பிலிருந்து இறங்கி என்ன பிரச்சினை என சோதனை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வண்டியில் மளமளவென தீப்பற்றி   எரிய துவங்கியுள்ளது.

உடனே ஜீப்பில் இருந்த அனைவரும் இறங்கி உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடியுள்ளனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.மேலும் இந்த விபத்தால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் அருகே ட்ரான்ஸ்ஃபார்மர் இருந்ததால் பொதுமக்கள் அருகில் செல்ல அஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து பெரும் விபத்திலிருந்து பாதுகாத்தனர். ஆனால் வண்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement