தமிழகம் இந்தியா Corono+

தமிழகம் - கர்நாடகம் இடையே மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியது; பயணிகள் மகிழ்ச்சி

Summary:

தமிழகம் மற்றும் கர்நாடக இடையே மீண்டும் போக்குவரத்து சேவை இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக இடையே மீண்டும் போக்குவரத்து சேவை இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்கு அனைத்தும் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தநிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான பேருந்து சேவையும் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கர்நாடகாவில் இருந்து ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தது.

ஆனால் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து கர்நாடகா பேருந்துகள் தமிழகத்திற்குள் வராமல் இருந்தது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு கர்நாடகக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து கர்நாடக மற்றும் தமிழகம் இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்துக்கு தொடங்கியுள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதல் வரும் 16 தேதி வரையிலும் 6 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தீபாவளியை முன்னிட்டு இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது மக்கள் மனதில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Advertisement