தமிழகம்

4 வருட காதல்.. திருமணத்துக்கு முதல்நாள் இரவு மணப்பெண் கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் காதலன்..

Summary:

தான் காதலித்த இளைஞருடன் திருமணம் நடைபெற இருந்தநிலையில், மணப்பெண் தாலிகட்டும் முன் எஸ்கேப்

தான் காதலித்த இளைஞருடன் திருமணம் நடைபெற இருந்தநிலையில், மணப்பெண் தாலிகட்டும் முன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணிற்கும், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்த விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவந்ததை அடுத்து இரண்டு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, இருவருக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதனை அடுத்து அன்று இரவே மணப்பெண் திருமண மண்டபத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.

இதனால் பதறிப்போன பெற்றோர், திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது மணப்பெண் வேறொரு இளைஞருடன் ஆட்டோவில் ஏறிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனிடையே அந்த இளம்பெண், வேறொரு இளைஞருடன் கிண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

தான் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களையும் காதலித்ததாகவும், இன்று திருமணம் நடைபெற இருந்த இளைஞரைவிட, மற்றொரு இளைஞருடன்தான் தான் வாழ ஆசைப்படுவதாகவும், தங்களை சேர்த்துவைக்கும்படியும் இளம் பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்துபோன இளைஞர், தன்னை காதலித்து, திருமணம் வரை கொண்டுசென்று ஏமாற்றியது, மோசடி செய்தது என காதலி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement