தாலிகட்டும் முன் மணமகள் சொன்ன ஒத்த வார்த்தை! அதிர்ச்சியில் உறைந்துபோன மாப்பிளை மற்றும் உறவினர்கள்.
தாலிகட்டும் முன் மணமகள் சொன்ன ஒத்த வார்த்தை! அதிர்ச்சியில் உறைந்துபோன மாப்பிளை மற்றும் உறவினர்கள்.

மாப்பிளை தாலிகட்டும் சில நிமிடங்களுக்கு முன் மணமகள் தனது காதலன் வந்து தாலிகட்டுவார் 1 மணி நேரம் காத்திருங்கள் என கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்படி திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று தாலி கட்டுவதற்கு முன் மணமக்களின் வழக்கப்படி ஒருவரை ஒருவர் பிடித்துள்ளதா என மனமக்களிடம் கேட்பது வழக்கம்.
முதல் 2 தடவை கேட்டதற்கு மவுனமாக இருந்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்டபோது தான் ஏற்கனவே ஒருவரை காதலித்துவருவதாகவும், அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வந்து தாலி காட்டுவார் அனைவரும் ஒரு மணி நேரம் பொறுங்கள் எனவும், அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அனைவர் முன்பும் கூறியுள்ளார் அந்த பெண்.
இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தநிலையில் எவ்வளவோ கூறியும் அந்த பெண் கடைசியில் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.