பேருந்து பயணம்! நாளடைவில் கர்ப்பம்! காதலன் கொடுத்த கருக்கலைப்பு மாத்திரை! ஆபத்தான நிலையில் சிறுமி!
பேருந்து பயணம்! நாளடைவில் கர்ப்பம்! காதலன் கொடுத்த கருக்கலைப்பு மாத்திரை! ஆபத்தான நிலையில் சிறுமி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 21 வயதாகும் குமார் அரசு கலைக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுவரும்போது அதே பேருந்தில் பயணம் செய்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் காதலர்களான இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்திப்பது, உல்லாசமாக இருப்பது என ஜாலியாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவி கர்ப்பமான நிலையில் இதை குமாரிடம் கூற, ஏதோ ஒரு கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி மாணவியிடம் கொடுத்துள்ளார் குமார்.
கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட சில மணி நேரங்களில் மாணவியின் உடல்நிலை மோசமான நிலையில் பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்களிடம் நடந்ததை மாணவி கூறியுள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து மாணவன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.