தமிழகம்

காதலிக்கு செல்போன் பரிசளிக்க மூதாட்டி கொலை.. கல்லூரி மாணவனின் பதறவைக்கும் செயலால் பேரதிர்ச்சி..!

Summary:

காதலிக்கு செல்போன் பரிசளிக்க மூதாட்டி கொலை.. கல்லூரி மாணவனின் பதறவைக்கும் செயலால் பேரதிர்ச்சி..!

காதலிக்காக செல்போன் வாங்க மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பட்டத்தாள். இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இவரது மகள் பார்வதி தாயை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில், தனது தாயை பார்ப்பதற்காக வழக்கம்போல பார்வதி சென்றபோது, அங்கே அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் இல்லாததால், பார்வதிக்கு தாயாரின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து பார்வதி வேப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயார் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சூர்யாதான் மூதாட்டியை கொலை செய்தது என  தெரியவந்தது. அத்துடன் அவர் தனது காதலிக்காக செல்போன் வாங்கி கொடுப்பதற்கு பணம் இல்லாததால், என்ன செய்வதென்று தெரியாதிருந்த நிலையில் தனிமையில் இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

மேலும், அவர் அணிந்திருந்த நகைகளை திருடி அடகு வைத்து காதலிக்காக செல்போன் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்,


Advertisement