துள்ளத் துடிக்க வெட்டி கொலை செய்யப்பட்ட கோழிக் கடைக்காரர்... குற்றவாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு!

துள்ளத் துடிக்க வெட்டி கொலை செய்யப்பட்ட கோழிக் கடைக்காரர்... குற்றவாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு!


boiler-shop-owner-was-murdered-at-his-shop-police-searc

திருநெல்வேலி மாவட்டத்தில்  கோழிக்கறி கடை நடத்தி வரும் முதியவர் மறுமணவர்களால் அவரது கடையில் வைத்தே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 70.

இவர் முக்கூடல் பாண்டியாபுரம் அருகே உள்ள தனது வீட்டை ஒட்டி கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் தனது கடையில் இருந்த போது மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கறி வாங்க வருவதாக நினைத்தார் ஆறுமுகம்.

tirunelveli

ஆனால் அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சராமாறியாக வெட்டினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு  முக்கூடல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்  ஆறுமுகம்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பரிதாபமாக பிரிந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களும் ஊர் மக்களும்  ஆறுமுகத்தை கொலை செய்தவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி  டி.எஸ்.பி ராமகிருஷ்ணன்  குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறி சமரசம் செய்து  மக்களை அனுப்பி வைத்தார். இந்த வழக்கு தொடர்பாக முக்கூடல்  காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.