விமானத்தில் விளம்பரப்படுத்தி அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு; வைரல் வீடியோ இதோ.!

விமானத்தில் விளம்பரப்படுத்தி அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு; வைரல் வீடியோ இதோ.!



BJP Annamalai Flight Adv Campaign 

 

2024 மக்களை தேர்தல் விறுவிறுப்புடன் ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இதற்காக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நா.த.க ஆகிய கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 முக்கிய கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் களம்காணவத்தால், தமிழ்நாட்டில் இத்தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. 

இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவயம்புத்தூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் அங்கு தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக விமானத்தில் விளம்பரப்படுத்தி வாக்கு சேகரிக்கப்படுகிறது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ உண்மையானதா? அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் எடிட் செய்யப்பட்டதா? என்ற விபரம் சேகரிக்கப்படுகிறது. பாஜகவின் மத்தியில் வீடியோ பரவுகிறது.