மூதாட்டியின் கழுத்தறுத்து; நகைகள் கொள்ளை... பகீர் சம்பவம்...!!

மூதாட்டியின் கழுத்தறுத்து; நகைகள் கொள்ளை... பகீர் சம்பவம்...!!


Beheading of old woman; Jewelery robbery...Bagheer incident...

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து  வந்தவர் ராதா(70), இவரது கணவர் வேலாயுதம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ராதாவிற்கு ரஜினி (42) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் ராதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்

இந்நிலையில், ராதாவின் மகன் ரஜினி ராதாவிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ராதா நீண்ட நேரமாக செல்போனை  எடுக்காதால் சந்தேகம் அடைந்த ரஜினி பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் விசாரித்துள்ளார். இதனை அடுத்து பக்கத்து வீட்டில் இருந்தவர்கள்  ராதா வீட்டிற்கு சென்று பூட்டி இருந்த கதவை தட்டியுள்ளார். 

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக ரஜினிக்கு போன் செய்து ராதா கதவை திறக்கவில்லை என்று கூறினார். இதனால் உடனடியாக வீட்டுக்கு வந்த ரஜினி அவர் வைத்திருந்த சாவியை வைத்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் ராதா காது மற்றும் கழுத்து அறுபட்டு  சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் காணவில்லை.