வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் இருப்பதை தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்! வங்கி அதிகாரிகளின் மோசடி! வெளியான பகீர் தகவல்!

வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் இருப்பதை தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்! வங்கி அதிகாரிகளின் மோசடி! வெளியான பகீர் தகவல்!



bank-officer-cheated

திருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா என்பவர் IOB வங்கியில் தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணத்தை வைப்பு தொகையாக வைத்திருந்தார்.ந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

இந்தநிலையில் அந்த வங்கியின் மேலாளரான ஷேக் மொய்தீன் மற்றும் உதவி மேலாளர் சின்னத்துரை ஆகிய இருவரும்  எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

இதனையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்வதற்கு திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்து, எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்தது போல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கி இருவரும் கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி,ரூ.25 லட்சத்துக்கு மேலாக பணம் எடுத்துள்ளனர்.

ATM

இந்நிலையில் IOB வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஷேக் மொய்தீன், சின்னத்துரை ஆகியோரின் திருட்டுவேலை அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.