இந்தியா விளையாட்டு

இந்தியா வந்தது வங்கதேச கிரிக்கெட் அணி! இரண்டு அணிகளுக்கும் கேப்டன்கள் மாற்றம்!

Summary:

bangaladesh team came india

வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நவம்பர் 3ம் தேதி தொடங்கவுள்ளது. வங்கதேச டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான புதிய கேப்டன்களின் தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகமதுல்லா ரியாத் மற்றும் மாமினுல் ஹக் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர். இந்த டி20 தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசம் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


Advertisement