தமிழகம்

அழ கூட தெம்பில்லாமல் கதறி துடிக்கும் சுஜித்தின் தாய்! நெஞ்சை உறையவைக்கும் சுஜித்தின் மரணம்.

Summary:

Baby sujith passed away

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் இன்று அதிகாலை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். கிட்டத்தட்ட 80 மணி நேரமாக சுஜித்தை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என போராடிய 300 இன் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்னன் கூறுகையில்: நேற்று இரவே ஆழ்துளை கிணறில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் ஆலோசனைப்படி இடுக்கி போன்ற அமைப்புடன் குழந்தை இன்று அதிகாலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உடற்கூறு ஆய்வுகள் முடிந்து மீண்டும் குழந்தையின் உடல் நடுகாடுபட்டிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து தனது குழந்தையின் பிரிவை எண்ணி கதறி அழுது அழுது தற்போது குழந்தை இறந்துவிட்டதை பார்த்து சுஜித்தின் தாய் கலாமேரியால் அழகூட தெம்பில்லாமல் கதறி துடிப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement