பிறக்கும்போதே முதுகில் கட்டி..! உயிருக்கு போராடும் பிஞ்சுகுழந்தை..! வறுமையால் ஆபரேஷன் செய்ய முடியாத சோகம்.! உதவ ஆளில்லாமல் தவிக்கும் பெற்றோர்.!

பிறக்கும்போதே முதுகில் கட்டி..! உயிருக்கு போராடும் பிஞ்சுகுழந்தை..! வறுமையால் ஆபரேஷன் செய்ய முடியாத சோகம்.! உதவ ஆளில்லாமல் தவிக்கும் பெற்றோர்.!


baby-having-problem-while-birth

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்றின் முதுகில் கட்டி வளர்ந்துவரும் நிலையில், குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் பெற்றோர் தவித்துவருகின்றனர்.

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அழகர்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). இவரது மனைவி அங்காளபரமேஸ்வரி. சலவை தொழில் செய்துவரும் முத்துபாண்டிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமான அங்காளபரமேஸ்வரிக்கு கடந்த 21ம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையை ஆசையோடு பார்க்க சென்ற பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை பிறக்கும் போதே முதுகில் இரண்டு இன்ச் அளவிற்கு கட்டி ஓன்று இருந்துள்ளது. விரைவில் கட்டியை அகற்றவேண்டும் எனவும், கட்டியை அகற்றாவிட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த 27ம் தேதி மதுரையில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையை சோதித்த மருத்துவர்கள் கட்டியை அகற்ற ரூ.2 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளனர். சலவை தொழிலாளியான முத்துபாண்டியிடம் அவ்வளவு பணம் இல்லை.

அதேநேரம் குழந்தையின் முதுகில் இருக்கும் கட்டி நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்ட போகும் நிலையில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது ஊரடங்கு என்பதால் முத்துபாண்டியால் யாரிடமும் பணமும் வாங்க முடியவில்லை. இதனால் தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே பொதுமக்கள் யாரவது குழந்தைக்கு உதவ நினைத்தால் குழந்தையின் தந்தை முத்துபாண்டியை இந்த எண்ணில் 99949 27703 தொடர்புகொள்ளலாம்.