தமிழகம்

எல்லை மீறிய வாக்குவாதம்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கத்திக் குத்து.. ஒருவர் கைது.. பரபரப்பு சம்பவம்..

Summary:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதல் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதல் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுவரும்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணியில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடந்துவருகிறது. சீறிவரும் காளைகளை இளைஞர்கள் அடக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அவிழ்த்துவிடுவதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறி பின்னர் கத்திக்குத்து வரை சென்றுள்ளது. இந்த தகராறில் அருண்குமார் மற்றும் தெய்வேந்திரன் என்ற இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருவரும் காயங்களுடன் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும்நிலையில் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement