ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஜாலியா ஜிம்கானா.. என்ஜாய் மக்களே.!

ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஜாலியா ஜிம்கானா.. என்ஜாய் மக்களே.!



aug-8-local-holiday-9-districts-in-tamilnadu-AWMWHA

மலையாளிகளின் திருவிழாவாக வெகுவிமரிசையாக சிறப்பிக்கப்படுவது ஓணம் பண்டிகை. நடப்பு ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கேரளத்து மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் 8-ம் தேதி ஓணம் பண்டிகையின் முக்கிய நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்று கேரளா மாநிலத்தில் அரசு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்படும். 

தமிழகமும் - கேரளாவும் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் இருவருக்கும் இருக்கும் பந்தம் ஆதிகாலத்தில் இருந்து தொன்றுதொட்டு இருப்பது ஆகும். கேரளாவில் ஓணம் அனுசரிக்கப்படும் செப் 8 ஆம் தேதியில் கேரளத்தவர் புலம்பெயர்ந்து அதிகளவில் வாழ்ந்து வரும் தமிழகத்து மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும். 

அந்த வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு 8-ம் தேதியானது ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 மாவட்டங்களுக்கு என மொத்தமாக 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.