தமிழகம் விளையாட்டு

கோட்டை தாண்டினா பட்லருக்கு நேர்ந்த மன்கட்தா; சென்னை போலீசாரின் வினோத விழிப்புணர்வு.!

Summary:

ashwin vs butler - manket wicket - trafic signal - chennai police

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது 11 சீசன் நிறைவடைந்து தற்போது 12 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.

இந்த சீசனில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்தி பட்லரை வெளியேற்றினார். விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தாலும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் சென்னை போலீசார், பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அஷ்வின் - பட்லரின் மன்கட் சர்ச்சையை பயன்படுத்தி, சென்னையில் பேனர்கள் வைத்துள்ளனர். 


Advertisement