அரியர் வைத்த மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

அரியர் வைத்த மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!



arrear exams will be held on online

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அரியர் வைத்த மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

arrear exams

இந்த நிலையில், அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தல் இன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.