கடந்த 60 ஆண்டு ஆட்சியில் நடக்காததை செய்து காட்டிய முதல்வர் விஜய்! தவெக அரசை புகழ்ந்து தள்ளிய பாஜக அர்ஜூனமூர்த்தி..!!!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து புதிய திருப்பங்கள் உருவாகி வரும் நிலையில், தவெக அரசின் செயல்பாடுகள் மீதான பாஜக பிரமுகர் அர்ஜூனமூர்த்தியின் கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாக மாற்றங்களை பாராட்டி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பதிவில், “தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நிர்வாக மாற்றத்தின் வெளிப்பாடாக தற்போது செயல்பட்டு வரும் தவெக அரசாங்கத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறேன்” என்று அர்ஜூனமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
திராவிட ஆட்சிகள் மீது கடும் விமர்சனம்
அதன்பின், கடந்த 60 ஆண்டுகளாக நடந்த திராவிட ஆட்சிகளில் நிர்வாக அமைப்புகள் முழுவதும் கட்சி பாகுபாடு மற்றும் அரசியல் தலையீடு ஊடுருவியிருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். விஏஓ முதல் செயலாளர் வரை, காவலர் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை பல்வேறு நிலைகளில் இந்த தாக்கம் இருந்ததாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கருத்துகள் வெளியாகியதையடுத்து, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, பாஜக வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் திறந்தவெளியில் தவெக அரசை பாராட்டியது அரசியல் ரீதியாக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அர்ஜூனமூர்த்தி
மேலும், “மாற்றம் என்பது வெறும் அரசியல் மாற்றமாக இல்லாமல், அரசாங்கத்தின் செயல்முறை மாற்றமாக இருக்க வேண்டும்” என்ற தனது நிலைப்பாட்டை முன்பே நடிகர் ரஜினிகாந்திடம் பகிர்ந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தகுதியும் அனுபவமும் கொண்ட நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி, மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சியை உருவாக்க முயற்சிக்கும் முதலமைச்சர் அர்ஜூனமூர்த்தி பாராட்டத்தக்கவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கோட்டை வட்டாரத்திலும் அரசியல் கட்சிகளிடையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நிர்வாக மாற்றத்தின் வெளிப்பாடாக தற்போது செயல்பட்டு வரும் @TVKPartyHQ அரசாங்கத்தை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன்.
பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரு கருத்து என்னவெனில், “மாற்றம் என்பது வெறும் அரசியல் மாற்றமாக இல்லாமல்,…
— Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) May 18, 2026