விரைவு இரயில் மோதி 26 வயது இளைஞர் பரிதாப பலி.. அலட்சியத்தால் நடந்த பரிதாபம்.!

விரைவு இரயில் மோதி 26 வயது இளைஞர் பரிதாப பலி.. அலட்சியத்தால் நடந்த பரிதாபம்.!


Ariyalur Youngster Died Train Railway Train crossing Chennai

 

அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த இளைஞர், விரைவு இரயிலில் மோதி பரிதாபமாக பலியாகினார். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்குடி பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார் (வயது 26). இவரின் சகோதரர் தம்பிராஜ் (வயது 23). இருவரும் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தனியே வீடெடுத்து வசித்து வருகின்றனர். 

சென்னையில் உள்ள தனியார் மாலில் அஜித் குமார் வேலைபார்த்து வந்த நிலையில், தம்பிராஜ் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று அஜித் குமார், ஆவடி - அன்னூர் இரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆபத்தான வகையில் கடத்துள்ளார். 

Ariyalur

அப்போது, அவ்வழியே அரக்கோணம் நோக்கி பயணித்த விரைவு இரயில் அஜித்தின் மீது மோதவே, அவர் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் தொடர்பாக ஆவடி இரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.