அரசுப்பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அரியலூரில் பரபரப்பு சம்பவம்.. விசிக பிரமுகரின் மகன் அதிர்ச்சி செயல்.!Ariyalur Pappakudi Youth throw petrol bomb govt Bus 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி, நரசிங்கம்பாளையம் உட்பட பல கிராமங்களுக்கு ஜெயங்கொண்டம் - காட்டுமன்னார்கோவில் வழித்தடத்தில் இறவாங்குடி வழியே அரசுப்பேருந்து சேவை வழங்கப்படுகிறது.

இன்று காலை வழக்கம்போல அரசுப்பேருந்து தனது சேவையை மேற்கொண்ட சமயத்தில், இளைஞர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டை எடுத்து வைத்து அரசு பேருந்து நோக்கி வீசி இருக்கிறார். கையில் பெட்ரோல் குண்டுடன் இளைஞர் வருவதை கண்ட பேருந்து ஓட்டுநர் முன்னதாகவே பேருந்தை நிறுத்தினார். 

இதையும் படிங்க: உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை பழிவாங்க அதிர்ச்சி நடவடிக்கை; வெடவெடத்துப்போன பெண்ணின் கணவர்.!

மீன்சுருட்டி காவல்துறை விசாரணை

இருப்பினும் பெட்ரோல் குண்டு பேருந்துக்கு அருகே வெடித்துச்சிதற, அங்குள்ள மக்கள் எதிராளியிடம் வேறு குண்டு இல்லாததை உறுதி செய்து அவரை மடக்கிப்பிடித்தனர். பின் மீன் சுருட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இளைஞர் பிரேம் குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகன் என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

காதல் விவகாரத்தில் பகீர் சம்பவம்

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண்மணி பேசாமல் இருந்த நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர் அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் என்பது உறுதியானது. அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவுவுதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடியோ நன்றிNewsJ

இதையும் படிங்க: நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து.. தள்ளிக்கொண்டு போன பயணிகள்.! அவல நிலை.!