நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து.. தள்ளிக்கொண்டு போன பயணிகள்.! அவல நிலை.!namakkal govt bus break down on road

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே ஒரு அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அந்த பேருந்தை தள்ளி கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பழுதான பேருந்து

நேற்று ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பாளையத்தை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது காவேரி ஆர் எஸ் பகுதிக்கு பேருந்து சென்ற போது திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றுள்ளது. ஓட்டுநர் அந்த பேருந்தை இயக்க எவ்வளவு முயற்சித்தும் கைகொடுக்கவில்லை.

இதையும் படிங்க: வழுக்கி விழுந்தவர்களை தூக்க சென்ற போலீசார்; கல்லால் அடித்த போதை ஆசாமிகள்.! குடிபோதையில் அட்டகாசம்.!!

மாற்று பேருந்து

இதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள், பயணிகள், நடத்துனர் அனைவரும் சேர்ந்து பேருந்தை முன்னும் பின்னும் தள்ளி இயக்க முயற்சித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னும் கூட பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை.

namakkal

எனவே, மாற்று பேருந்து வந்து பயணிகள் அதில் ஏறி சென்றனர். அதன்பின் சிறிது நேரத்தில் பேருந்து பழுது நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் ஈரோட்டுக்கு பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 

நீடிக்கும் அவலம்

இதுபோன்ற பழைய பராமரிப்பு இல்லாத பேருந்துகளால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயணிகள் பாதியிலேயே இறங்கி வேறு பேருந்தில் பயணிக்கும் நிலை இருக்கிறது. எனவே, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!