இப்படி ஒரு காரணமா? திரிஷாவுக்குத் இதில் தலையீடு உள்ளதோ... அர்ச்சனா கல்பாத்தி நியமனத்தில் வெடித்த பூகம்பம்! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு!!!
தமிழக திருக்கோயில்களின் அறங்காவலர்களை நியமிக்கும் 7 பேர் கொண்ட முக்கிய குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய பதவிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது எதிர்காலத்தில் அரசியல் பிரச்சினையாக மாறக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவியா?
‘தி ஜென்டில்மேன்’ யூடியூப் சேனலில் பேசிய சேகுவேரா, சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்குவதில் தவறில்லை என்றார். அதேநேரம், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா, இங்குள்ள மக்களுடனும் பண்பாட்டுடனும் தொடர்புடையவர்களா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி... 234 சட்டமன்ற தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.828. 36 கோடி ஒதுக்கீடு....! அதிரடி காட்டும் முதல்வர் விஜய்!!!
முந்தைய ஆட்சிக் காலங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க. ஆட்சிகளில் ஆர்.எம். வீரப்பன், ராமநாராயணன் உள்ளிட்ட சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வெங்கட் நாராயணா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் சேகுவேரா கூறினார். தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிப்பது சரியான அணுகுமுறை அல்ல என அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் அரசியல் விவாதமாகும் என எச்சரிக்கை
வரவிருக்கும் தேர்தல் காலத்தில் ‘தமிழினம், தமிழ் உணர்வு’ என்ற விவாதத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தால், இந்த நியமனங்களும் பிரசாரப் பொருளாக மாற வாய்ப்புள்ளதாக சேகுவேரா தெரிவித்துள்ளார். இதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அது பெரிய அரசியல் எதிர்ப்பை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, அர்ச்சனா கல்பாத்தி நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழி என்பதால், அவரது நியமனத்தில் திரிஷாவின் தலையீடு இருந்திருக்குமா என்ற வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதற்கு ஆதாரபூர்வமான தகவல் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
கோயில் பணிகளை காரணமாக கூறுவது ஏற்புடையதா?
அர்ச்சனா கல்பாத்தி 10 முதல் 20 கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த விளக்கத்தையும் சேகுவேரா ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் சொந்தப் பணத்தை செலவிட்டு கோயில்களுக்காக அறப்பணிகள் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ள நிலையில், அவர்களுக்கு இதுபோன்ற அரசு பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார். எனவே, இந்த காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து நியமனத்தை நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம்பெற்றுள்ள அறங்காவலர் நியமனக் குழு போன்ற அமைப்புகளில் பிரபலங்களுக்கு இடம் வழங்கும்போது, அவர்களின் செல்வாக்கு மேலோங்கும் வாய்ப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என சேகுவேரா தெரிவித்துள்ளார். சர்ச்சை எழுந்த பிறகு விளக்கம் அளிப்பதைவிட, நியமனத்திற்கு முன்பே இதுபோன்ற விவகாரங்களை அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் மாணவருக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!